Thursday, October 28, 2010

நட்பு மட்டுமே நமக்குள்

"காதலின் அர்த்தமே தெரியாது"
அவள் உதடுகள் சொன்னதை
அவள் கண்களே  மறுத்தன

நட்பு மட்டுமே நமக்குள்
என்றவள் தூரசென்று
திரும்பி பார்த்தாள்.

விலகி செல்ல செல்ல
இடைவெளி குறைந்தது

பிறந்த நாட்கள்
அவள் வருகையில்
பண்டிகை ஆனது

கைப்பேசி க‌ட‌வுளான‌து
க‌டிகார‌ம் எதிரியான‌து

நட்பும்-காதலும் போட்டி
நிஜமாகவே சுவாரசியம்தான்
தோற்று போக‌
இருவருக்குமே
எத்தனை ஆசை!

நீ....

உன்னிடம் சண்டையிட ஆசை
ஆனால் நீ விழிகளிலேயே
சமாதானம் பேசுவாய்....

உனக்காக காத்திருக்க ஆசை
ஆனால் எனக்கு முன்னமே நீ
பூத்திருக்கிறாய்

உனக்கு பிடித்ததை பரிசளிக்க ஆசை
என்ன செய்வது?என்னைதானே
உனக்கு மிகவும் பிடிக்கும்

உன்னை மிக நேசிப்பதாய் நினைப்பேன்
ஆனால் நீ என்னையே
முழுவதுமாய் சுவாசிக்கிறாய்!!

Wednesday, October 27, 2010

கல்வெட்டுக்கள்..

உளிகள் இல்லாமல்
வலிகளால்
செதுக்கப்படும்
கல்வெட்டுக்கள்..

இதயத்தில்
அவள் நினைவுகள்....

தெய்வத்தாய்

அம்மா! உன்னை
கடவுளோடு ஒப்பிட்டால் நான்
ஏற்க மாட்டேன்
"கடவுள்"
கல்லில் செய்த
உருவம்!
என் "அம்மா"
பொறுமையில்
செய்த தெய்வம்!..
                                  --ஜெ.ரேவதி

Tuesday, June 29, 2010

பிரிந்தோமா...?

பிரிதல் எப்படி
சாத்தியம்?
உன்னில் இன்னும் நான் இருக்கையில்...

உதடுகள் மாற்றுகின்ற
உண்மையை
கண்ணாடியில் முகம் பார்த்து
கண்களிடம் கேள்.

கோபத்தில் நீ எறிந்த
வார்த்தைகளைக் கனல்துளிகளாய்
குவித்து வைத்திருக்கிறேன்
குளிர் காய்வதற்கு



நீ தந்த காயங்களை கூட
ஆறுவதற்கு நான்
அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்ட வேண்டுமென்று

உன் நினைவுகளை
எரித்த சாம்பலிலும்
பீனிக்ஸ் பறவையாய்
நீயேதான் எழுகிறாய்

பிறகெப்படி நாம்
பிரிந்தோம் என்கிறாய்...?

ஏமாற்றம்

ஏமாற்றம் என்றாலும்
என் வாழ்வில் - நீ
மாற்றம் தான்
மாற்றம் தந்தவள் தான் - நீ

என்ன மந்திரம் செய்தாய்

உன்னைவிட
அழகான பெண்கள்
எல்லாம் என்னைக்
கடந்து போகிறார்கள்...
உன்னைவிட
அக்கறையோடும் சிலர்
என்னை
நேசிக்கிறார்கள்...
இருந்தும்
உன்னை மட்டுமே
நினைக்கும்படியாய்
என்ன
செய்தாய் என்னை?

வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

என்றும் நிலைத்திருக்கிறது

உன்னை
மறக்கவேண்டும் என்று
உன் நினைவை விட்டு விலகி
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
நான் ஓடும்போதெல்லாம்
என் நிழலாக
உன் நினைவுகளே
என்னை
துரத்திக்கொண்டு வருகிறது
எங்கும் நிறைந்திருக்கும்
வானம் போல்
உன் நினைவுகளே
என் மனவானில்
என்றும் நிலைத்திருக்கிறது

ஒரு பிறவி இன்பம்!

உன்னிடமிருந்து பிரிக்குமென்று தெரிந்திருந்தால்...
விடியலே வேண்டாமென்றிருப்பேன்!
பரவாயில்லை...
உன்னுடன் வாழ்ந்தது கனவாக இருந்தாலும்!
எனது ஒரு பிறவியை வாழ்ந்த ஒரு இன்பம்...
என் மனதுக்குள்  நிலைத்துவிட்டது.....

நிஐமான காதல்!!!!

காதலிக்கத் தெரிந்த
உனக்கு
காதலைச் சொல்ல
துணிவில்லை..................

கண்களால் பார்க்கத் தெரிந்த
உனக்கு
பேசுவதற்கு வார்த்தைகள்
தெரியவில்லை.......................

மனதைக் கலைக்கத்
தெரிந்த உனக்கு
என் மனதின் விருப்பத்தை
அறிய முடியவில்லை...........

அதனால் தான்
கேட்கின்றேன்
நீ என்னைக் காதலித்தது
நிஐம் தானா???

நிஐமென நம்பி வாழ்ந்த
நான் இன்று
உன் நிழலைத் தேடி
அலைகிறேன்...........
ஏனெனில்

நான் உன் மேல்
கொண்டது
நிஐமான காதல்!!!!

Monday, June 28, 2010

தோழி


தோழி...............
கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........

அன்பு

ஒரு பெண் மீது அளவுகடந்த அன்பு வைப்பதே குற்றம் என்றால்
என்னை குறைந்தபட்சம் நூறு முறையாவது தூக்கில் போட வேண்டும்

Friday, June 25, 2010

என் இதயம்

ஒரு பொருள்
இருப்பதை விட
இல்லாமலிருப்பது
கனமாகாது
எனும் விஞ்ஞானகூற்றை
உடைத்தெறிந்தது..
நீ விட்டு சென்று
போன என் இதயம்..

இடைப்பட்ட வெளி

உனைக்குடித்து மயங்கி
இரவுகளில் பலநாள் இறந்திருக்கிறேன்.
தியானத்திற்கும் விழிப்பிற்கும்
இடைப்பட்ட வெளிதான் உன் நினைவு.
எவ்வளவு கரைத்தாலும் கரையாத
அந்த உன் ஒரு துளி நினைவுதான் இப்போதும்
உன் கைக்குச் சிக்கக்கூடிய ஜெடப்பொருளாய்
எனை வைத்துள்ளது.
தயவுசெய்து உயிர் கொடு
அல்லது
கரையாத உன் ஞாபகங்களை எடுத்துச்செல்

மனக்கோட்டை

உனைப்பற்றிய ஒவ்வொரு துகளாய் சேர்த்தேன்
உன் வெட்கம்
சிரிப்பு
கவனிப்பு
கொஞ்சல்களென
இவைஅனைத்தும்வைத்து
கொஞ்சங்கொஞ்சமாய்
எதையோ கட்டிக்கொண்டிருந்தேன்
கடல் மணலில் கோபுரம்கட்டிய குழந்தை போல்
ஒரு பரவசம் பொங்கி படர்ந்துகொண்டிருந்தது
அன்று வேறொருவனுடன் உனை பார்க்கும்வரை.
அப்புறம்
மிகவும் அந்நியமாகிப்போனது
நான் கட்டியது.
உள்ளே நான் வாழவுமில்லை,
இடிக்கவும் மனமில்லை,
நினைவுச்சின்னமாக்கவும்முடியவில்லை.
விட்டு வந்துவிட்டேன்.

தெரியுமா தெரியவில்லை

தூரத்தில் அலைமாற்றம் செய்துகொண்டிருக்கும்
ரேடியோவுக்கு தெரியுமா தெரியவில்லை
அந்த பாடல் உன்னை ஞாபகப்படுத்துமென்று,
நீ பேசும்போது தேனாய் கேட்கவைக்கும் செல்போனுக்கு
தெரியுமா தெரியவில்லை
அதில் அதிகம் கலைந்துபோகிறேனென்று,
நீ முனகிய பாடலை ஒளிபரப்பும் சன் டிவிக்கும்
அதை அழகாய் காண்பிக்கும் என் வீட்டு டிவிக்கும் தெரியுமா தெரியவில்லை
அதில் நீ தெரிகிறாயென்று.
இவை அனைத்தும் உயிரற்றவையாய்தான் இருக்கின்றன
உனை ப்ரதிபலிக்கும்வரை
அல்லது
உனை பூசி உயிருள்ளவையாய் மாறிவிடுகின்றன.

உனை தெரியாத தனிமை

நீ தெரியாதபோது
தகித்து எரிந்த இரவுகளில்
உனை தெரியாத தனிமை
ஒரு எதிரியாய் கடந்துசென்றது

நீ இருந்தபோது
நீ இல்லாத நேரங்களில்
அதே அழுத்தத்தின்
வேறு பரிமாணத்தில்
ஒரு மேகமாய் மாறி விட்டிருந்தது

நீ அருகிலிருக்கும்போது
நானில்லா உன் புகைப்படங்களில்
எட்டிப்பார்த்துவிடுகிறது என் தனிமை
எதிர் வீட்டு நாய்க்குட்டியாய்

எதேதோ சொல்லி
உன் கண்ணீரில் நம் காதலை
கரைத்த அந்த இரவிலிருந்து
ஒரு நண்பனாய் அருகே படுத்துக்கிடந்தது

இப்படி
தனிமையோடு சேர்ந்திருந்ததில்
என்னுடன் பழகிவிட்டிருந்தது
இப்போதெல்லாம்
என்னை விட்டு எங்கும் பிரிந்துபோவதேயில்லை
பர்சில் யாருக்கும் தெரியாமல்
வைத்திருக்கும்
என் ராசியான கடவுள்போல

தொலைந்துதான் போனேன்

தொலைந்துதான் போனேன்
இத்தனை நாளாய்.
நீயென்று நான் இருந்ததினால்,
உன் நிழல் தாங்கி
நான் நடந்ததினால்,
என் பாதச் சுவடுகளின்றி
தொலைந்தேதான் போனேன்….

இன்றுதான் தெரிந்தது,
நீ நீயென்று,
நான் நானென்று.
உன் பாதை வேறு,
என் பயணம் வேரென்று!!

புரியாமல் பயணித்ததற்கா....
இவ்வளவு பெரிய தண்டனை?
முன்பே சொல்லி இருக்கலாம் நீ,
என் வரவு உனக்குப் பிடித்தம் இல்லையென,
உன்னை விரும்பாமலாவது
இருந்திருப்பேன்,
இப்படி இறந்திருக்க மாட்டேன்.
என் அழுகையாவது
இந்த பூமியை
நனைக்காமல் இருந்திருக்கும்!

பூக்கள் கேட்டதற்காய்
முட்கள் பரிசளிக்கிறாய்,
மணற்கோட்டை கட்டியதற்காய்
பேரலையாய் அடித்துச் செல்கிறாய்,
இன்று கிளிஞ்சல்கள் மட்டுமே மிச்சமாய்,
நான் கரையோரத்தில்,
நீ தொலை தூரத்தில்…..

விழியில் வழியும் நினைவுகள்…

மனம்
அழுதிடும்போதும்
உனையே தேடும்,
அழுகைக்கு காரணம்
நீயாக இருப்பினும்….

தனிமையின்
தேடல்கள்
உனையே சாரும்….
உன்னைப் பிரிந்த
தனிமையானாலும்…..

எதுவாக இருப்பினும்,
எல்லாம்
உன்னைச் சுற்றியே
சுழலும்வரை
எனக்குக் கவலையில்லை
நீயென்று நானிருப்பதனால்…

காத்திருக்கிறேன்

முற்றத்தில் அமர்ந்த
காகம் சொன்னது,
நீ விரைவில் வரும் செய்தியை!
நீ நாளை வருவாய்
என்று சொன்னாலும்,
அவ்வளவு நேரமா என்று
பதறும் என் உள்ளம்;
இப்படி எத்தனை நாளைதான்
நான் எண்ணிக்கொண்டிருப்பேன்
உன் வரவை…..
காகம் சரியாக சொன்னதா அல்லது
நான் தவறாக புரிந்துகொண்டேனா,
தெரியவில்லை,
ஆனால் காகம் மட்டுமல்ல…
யார் கதவை தட்டினாலும்
நீயேதான் இருப்பாய் என்று
ஓடி வருகிறேன்….
என்றாவது நீ வரும் நாளன்று
களையிழந்து விடுவேனோ

என்றே வருந்துகிறேன்!

ஏன் பிரிந்தாய் எனை?

பிரிந்திடும் நேரத்தில்
நான் அறிந்திடவில்லையே..
வெறும் வானம்தான் நானென்று,
அதன் நீலமோ நீயென்று,
இன்று உன் நினைவுகள் மேகமாய்,
என்னைத் தழுவிடும்போதெல்லாம்,
மழையாய் அழுகிறேன்,
வெறுமையாய் நான் உணர்கிறேன்,
கவிதையைத் தேடி அலைகிறேன்,
உனக்குள் தொலையத் துடிக்கிறேன்.

ஒரு கணம் தோன்றுமே,
நீ அருகினில் இருப்பதாய்,
உயிர் வலி கொல்லுமே,
நீ விலகியே நிற்பதால்,
மறுபடி தோன்றினால்,
என் மலர்விழி கொள்ளுமாய்,
கண்ணீராய் நிரம்பிவா,
பெண் நீராய் உருகினேன்,
கானல் நீராய் கனவுதானோ?
நான் கலையாதிருக்கும் வானம்தானோ?

தனிமை

முன்பெல்லாம் எப்போதாவது கிடைக்கும்
தனிமைக்கு வருத்தப்படுவதுண்டு…
இப்போது தனிமை பழகிவிட்டதால்
எப்போதும் இனிமையாகவே இருக்கிறது…

ஆயிரத்தெட்டு நண்பர்கள்,
கட்டுக்கோப்பான வெட்டிக்கதைகள்,
தேவையில்லாத அரசியல்,
எப்பொழுதும் யாரைப்பற்றியாவது
உருப்படியற்ற விமர்சனங்கள்,
ஏமாந்த பேர்வழிகள்
வசமாக மாட்டுகையில்,
எண்ணையில் போட்ட
பண்டமாய் பொரித்தெடுத்தல்,
தன்னுடைய கருத்தே சிறந்ததென
ஒவ்வொருவரும் வாதிடுதல்,

இப்படி எப்படியெல்லாமோ
கூடிக் கழித்திருந்த
பொழுதுகள் இனிமையாகத்தான் இருந்தன,
என்றாவது ஒரு நாள்
என்னைப்பற்றியும் இப்படி பேசுவார்கள்
என்று அறியாதவரையில்!!

இப்போது தனிமையே
இனிமையாக இருக்கிறது…
எனக்கென்ற பொழுதுகள்,
என்னைசுற்றிய கவலைகள்,
என்னைப்ற்றிய விமர்சனம்,
இப்படி எல்லாமே எனக்காகவே
நானே சிந்தித்திருக்க,
தனிமையும் கொஞ்சம் தேவைப்படுகிறது…
ஆகையினால், என்னை உருவாக்கும்
இந்த தனிமை இனிமையானதே….

சிலந்தி

பெண்கள் சிலந்திகள்
ஆண்கள் பூச்சிகள்

Thursday, June 24, 2010

தீண்டாமை

காதல்
-ஒரு பாவம்
காதலர்கள்
-பெருங்குற்றவாளிகள்
அவர்களுக்கு உதவுவது
-மனித தன்மையற்ற செயல்

இடைவெளி

சின்னதோர் உரசலில்
தெறிக்கின்றன
தீப்பொறி வார்த்தைகள்

வார்த்தையின் சூட்டில்
வெடிக்கிறது
வீட்டின் கூரை

விரிசலுக்கான
காரணம் சொல்லி
ஒருவருக்கொருவர்
வார்த்தைகள் வீச
மேலும் மேலும்
விரிசல்கள்

பிறிதொரு நாளில்
ஆளுக்கொரு மலை விளிம்பில்
விழிகள் பிதுங்கி
வார்த்தைகளற்ற
பள்ளத்தாக்கு பார்த்து

காரணங்கள்

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன

சில எதிர்மறைக் குறிப்புகள்!

ஓட்டுநரின் விழிப்பின் மீது மட்டும்
நம்பிக்கை வைத்து
உறங்கிவிட முடிவதில்லை
பேருந்து பயணத்தில்

இரண்டு மூன்று சந்துகள் திரும்பி
இல்லத்தின் முன் நிறுத்திய ஆட்டோக்காரர்
பேசியதை விடவும் அதிகம்
கேட்காமல் இருந்ததில்லை ஒருபோதும்

திரைப்படத்தின்
இடைவேளையில் எதிர்ப்படும் நண்பனிடம்
"சினிமாவுக்கா?" எனும்
அசட்டுக் கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை
எவ்வளவு முயற்சித்தும்

திறமையின் பெரும்பகுதி
நல்லவனாய் நடிப்பதற்கென்றே
செலவாகிப் போகிற அபத்தத்தை
என்ன பெயரிட்டு அழைப்பது?

கனவை முழுமைப்படுத்த முடியாமலே
கலைந்து போகிறது
ஒவ்வொரு விடியற் பொழுதும்

இப்படி எதிர்மறைகளும்
இயலாமைகளும் இணைந்தே
கட்டமைக்கின்றன
இயல்பான வாழ்வை

நான்

நட்சத்திரக் கூட்டத்திடையே
ஒற்றை நிலவாய்
என்றும் தனிமையில்

உணர்வில் நேச நெருக்கம்
நேர்ந்திட
நதி நீரில்
"நான்" தொலைந்து நீயாகியிருக்க
உனக்கு தெரியாமல் போன
என் முகம்

உன்னால் தொலைத்து விடமுடியாத
"நான்"கள்
நீர் பிடித்து தூக்கித்
தாகம் தீர்த்த
பச்சை மண் பானைகளோடு
கரைத்துப் போனது
என்
கனவுகளையும் சேர்த்து

வனைய முடியாமல் போனதற்காய்
வாளேந்தும் பரசு ராமர்கள்

காதலில்
களைந்து விடும் "நான்"கள்
சாத்தியமாக
மண்ணிலென்ன
கண்களறியா காற்றில் கூட
நீர் பிடித்து வருதல்
கை கூடிவரும்
உனக்கும் எனக்கும்..

Tuesday, June 22, 2010

காதல்

காதலுக்கு
கற்பு உண்டு...!
ஆனால்
காதலர்களுக்குதான்
இல்லை
வெட்கம்,
மானம்,
சூடு,
சுரணை.......!

Let ur Skills Roar

"The Person who risks nothing"

does nothing, has nothing, is nothing..

Friday, June 18, 2010

உன் நினைவு ...!

கலைந்து போகின்றது மேகம்

என் கனவிலும் கலையாதது உன் முகம்..
உதிர்ந்து போகின்றன மலர்கள்
என் உள்ளத்தில் இருந்து என்றும்
உதிராதவை உன் நினைவுகள்
தொலைந்து போனது சுகம்.

தினம் தொடந்து வருகிறது
உன் நினைவுகளின் சோகம் ...!


Tuesday, June 15, 2010

துணை

நான் மட்டும் தனியாக
வர வேண்டும் உன்னோடு
உன் நிழல் கூட வந்தாலும்
என் நெஞ்சம் தாங்காது!

விடியும் வரை

இறைவன் காலடியில் கிடக்கும்
மலர் போல
இரவு முழுவதும் உன் காலடியில்
கிடப்பேன்

சந்தேகித்தால்

நீ என்னையே சந்தேகித்தால்
என் செய்வேன் பெண்ணே

நான் உன் கண்களை பார்க்கிறேன்
நீயோ துப்பட்டாவை சரி செய்கிறாய்!

வலி

இரவில் நான்
கிணற்றில் விழுந்த
நிலா

நீ கல் எரிகிறாய்
விடியும் வரை

Friday, June 11, 2010

நான் க‌விஞ‌னா?

விழிக‌ள் இர‌ண்டும் திற‌ந்திருக்க‌
ஆழ்ந்த‌ தூக்க‌த்தில் இருக்கிறேன்
சிற‌கின்றி க‌ற்ப‌னை வானில்
நித்த‌ம் நித்த‌ம் ப‌ற‌ந்து செல்கிறேன்
ம‌ன‌தில் தோன்றிய‌ சொற்க‌ளை
காகித‌த்தாளில் கிறுக்கி விடுகிறேனே
ஆறு அறிவு ப‌டைத்த‌ ம‌னித‌ருள்
ஏழாவ‌து அறிவையும் பெற்றேனோ
ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சிந்திற்கும் அள‌விற்கு
வ‌ரிக‌ளைச் செதுக்குகிறேனே
க‌வி எழுதுவ‌தையே பிற‌க்கும் முன்
க‌ட‌வுளிட‌ம் வ‌ர‌மாகப் பெற்றேனோ
என‌க்குள் ஏதோ ஒரு ஞான‌ம்
தின‌ம் வ‌ந்து வ‌ந்து போகிற‌து
என் குளிய‌ல‌றையில் த‌ண்ணீர்
இருக்கிற‌தோ இல்லையோ
நிச்ச‌ய‌ம் ஒரு தாளும் பேனாவும்
க‌ண்டிப்பாக இருக்கும்...
காத‌லில் வீழ்ந்த‌ பெண்ணின்
கைத்தொலைபேசி எப்பொழுதும்
அவ‌ள் காதிலேயே இருக்கும்..
க‌விதைக்குள் வீழ்ந்த‌ என‌து
கையில் எப்பொழுதும் ஒரு
பேனா இருக்கும்...
இவையெல்லாம் என‌க்கிருக்கும்
நோய் .. எந்த‌க் க‌டையிலே விற்கிற‌து
அத‌ற்கு ம‌ருந்து ..என‌க்கேன்
இந்த‌த் த‌ண்ட‌னையை
கொடுத்தாய் இறைவா.....

நீதான‌டி...

என் பாலைவ‌ன‌ம் எங்கும் அன்று
பூக்க‌ள் பூத்த‌து உன்னால்தான‌டி
சிரிக்க‌த் தெரியாத‌ என‌க்கு புன்ன‌கைக்க‌
சொல்லித் த‌ந்த‌தும் நீதான‌டி...
எழுத‌வே தெரியாத‌ என்னை இன்று
க‌வி எழுத‌ வைத்த‌தும் நீதான‌டி
பேச‌த் தெரியாத‌ என‌க்கு இன்று..
பாட‌க் க‌ற்றுக் கொடுத்த‌தும் நீதான‌டி
க‌ல்லாக‌ இருந்த‌ என்னை இன்று..
சிலையாக‌ செதுக்கிய‌தும் நீதான‌டி
க‌ல்லாக‌ இருந்த‌ பொழுது அன்று என்னை
எவ‌றும் வெறுக்க‌வுமில்லை விரும்ப‌வுமில்லை
ஒரு சிற்ப‌மாக‌ செதுக்கிய‌ நீயே..
என்னை இன்று வெறுத்தாய் ஏன‌டி
அழ‌த் தெரியாத‌ என்னை இன்று
அழ‌ வைத்த‌வ‌ளே நீதான‌டி...

மாறும்... மாறும்... எல்லாம் மாறும்...

மாறும்... மாறும்...
எல்லாம் மாறும்...

நண்பர்கள் மாறுவர்..
உலகம் மாறும்..
நீ மாறுவாய் ...

பிடித்தவை கூட
பிடிக்காது போகும்.
பிடிக்காதவையும்
ஓர் நாள் பிடித்து போகும்...

இன்றைய
தலை போகும் நிகழ்ச்சி
நாளை -
சிரிப்பான செய்தி ஆகும் ...

ஒரு விஷயத்தை
அடைந்த பிறகே
அதில்
ஒன்றுமே இல்லை என்று புரியும்..

நட்பு மாறும்.
கோபம் குறையும்.
துக்கம் மறக்கும்.

மாறி, மாறி,
மாறி, மாறி
மறைந்து போவாய்..

மாறும்... மாறும்...
எல்லாம் மாறும்...

அம்மா...

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

எத்தனை ரணம் என்னுள்

சில நொடிகள் வாழ்க்கையை மாற்றிவிடும்
அது உண்மைதான்,
அவளைச் சந்தித்த பொழுதுகள்
என்னை முற்றிலும் மாற்றிய தருணங்கள்
எரியும் நெருப்பில்
எரியும் விறகாய்
எரிந்தபடியெ நான்!
இன்னும் எத்தனை காலம்
இந்த சோகம்?

நான் மட்டும் எதை தேடினாலும்
தேடும் பொருள் அருகில் இருந்தும்
தேடியபடியே தான்
என் தேடல்கள்
எதில் முடியும்
எனி நான் பேசப்போவதில்லை
என் வார்த்தைகள் யாவும்
சுவற்றில் மோதிய பந்தாய்
இந்த வலி கொஞ்சம் கொடுரமானதுதான்
எத்தனை ரணம் என்னுள்
இருப்பினும் இதை ரசிக்கிறேன்
அவளை நினைக்கிறேன்
என் ரணத்திற்கு அதுதான் மருந்து....

உன்… சிரிப்பினில்…

ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

உன் விலகலை
ஓர் புன்னகையோடு தான்
ஒத்துக் கொண்டேன்.
நல்லவேளை
அகத்தின் அழுகை முகத்தில் தெரியவில்லை.

எதுவும் நிலையில்லையடி
அதை
உன் விலகலில் தான்
எனக்கு உணர்த்த வேண்டுமா ?

உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !

துவக்கமும் முடிவும் இல்லாதது
காதல் என்கிறார்கள்.
நான் துவங்கி வைத்தேன்
நீ முடித்து வைக்கிறாய்
பழமொழி பழசாகிப் போகிறதோ ?

யாரையும் நேசிக்க யாரும்
கற்றுத் தருவதில்லை.
உன்னை நேசிக்க வேண்டாமென்று
கற்றுத் தர மட்டும்
சுற்றித் திரிகிறது சுற்றம்.

உன் உதடுகள்
நிறுத்தாமல் சொல்லும் பொய்க்காய்
தலைகுனிகின்றன உன் இமைகள்.
நிமிரும் போது
நிஜம் சொல்லி நனைகின்றன கண்கள்.

உன் சிரிப்புக்குள்
என்னதான் இருக்கிறதோ ?
அது தான் என்
பிடிவாதங்களுக்கெல்லாம்
தற்கொலை முனையாகிறது.

மனதை ஏற்க மறுக்கிறாய்

உன் மீது பித்தனாக இருந்தபோது
எல்லாம் நீ உணரவில்லை
ஆனால் இன்று புத்தனைப் போல
போதனைகள் சொல்கிறாய் என்னிடம்
எதிர்பார்க்காதே என்று...

வருடங்களில் வாழ்ந்துவிட்டேன்
உன் அன்பான பேச்சில்
நொடிகளில் இறக்கிறேன்
இன்று எனக்கு நீ இல்லை
என்று நினைக்கும் பொழுது...

நீ வரும் நேரத்தை எதிர்பார்த்து
என் நேரத்தை எல்லாம் கரைத்து
காத்திருப்பேன்
நீ வரும் வீதியில்..
எனது பார்வை எல்லாம்
உன் திசைநோக்கியே !

நாள் முழுக்க நான் சேகரித்த
வார்த்தைகளை சொல்ல
உன் அருகில் வரும்போதெல்லாம்
மறுபிறவி எடுக்கிறது மரணித்து
எனது காதல.........

எங்கேயோ இருக்கும்
முகம் பார்க்காத ஒருத்தனுக்கு
மாலையிடக் காத்திருக்கிறாய்
உன்னையே எதிர்பார்த்து காத்திருக்கும்
என் மனதை ஏற்க மறுக்கிறாய்
ஏனடி..............?


எங்கையோ இருக்கும்
முகம் பார்க்காத ஒருத்தனுக்கு
மாலையிட காத்திருக்கிறாய்
உன்னையே எதிர்பார்த்து காத்திருக்கும்
என் மனதை ஏற்க மறுக்கிறாய்
ஏனடி..............?


ஓ...
சோகக் கவிதைகள் இங்கே
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட
இது தானா காரணம்...?

சோதனைதான்
தொடரும் வேதனைதான்.

இங்கே...
யாரை யார் நொந்து கொள்வது...?
விதி எழுதிய கதை யாரறிவாரோ...?

இருப்பினும்
இறுதிவரை போராடு.

உன் மீது பித்தனாக இருந்தபோது
எல்லாம் நீ உணரவில்லை
ஆனால் இன்று புத்தனைப் போல
போதனைகள் சொல்கிறாய் என்னிடம்
எதிர்பார்க்காதே என்று...

Thought For the Day

Thursday, June 10, 2010

தனிமைப் பயணம்

என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவு நீ இல்லாமல்..!
என் இதயப் படகு
தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்!
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்..!
என் வாழ்க்கைச் சாலை
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்!
ஆம்! தொடர்கின்றது
என் தனிமைப் பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய்..!

காதலித்துப் பார்

வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழும் முடியுமே
சம்பிரதாயங்கள் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்துப் பார்க்கையில் உன் தெருக்கள்
களபோயிவு ருந்தாலும்
நீ நேசிக்கும் அவள் உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்துப் பார்
சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதல்

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

Tuesday, June 8, 2010

என்ன சொல்ல வந்தாய் என்னிடத்தில்…..


ஓரப்பார்வை வீசிப்போகும்
இளந்தென்றலே
என்ன சொல்ல வந்தாய்
என்னிடத்தில்

பூமி பார்த்துப்
புன்னகைத்துப் போறவளே
இந்தக் காளையைப் பார்த்து
காதல் சொல்ல வந்தாயா?

பட்டுத்தாவணி
தொட்டுக் கொள்ளும் பாதங்களே
அவளிற்கு ஒருமுறை
அனுமதி கொடுங்கள்
என்னைப் பார்ப்பதற்கு

யாரும் இல்லாத
பொழுது போகுமுன்னே
சொல்லிவிடு பெண்ணே
சொல்லவந்ததை

இல்லையேல்

என்னைத் தொலைத்தபடி நானும்
உன்னைத் தொலைத்தபடி நீயும்
இந்தப் பொழுதை மீண்டும் தேடி
தொலைக்கவேண்டும்
எம் நந்தவன நாட்களை.

என் இனிய தோழி

என் பூமி
இன்பமாய் நனையும்
அழகிய மழை - நீ

என் வானம்
அழகுற தோன்றும்
அழகிய வானவில் – நீ

என் விழிகள்
தேடிய பிழையில்லா
அழகிய கவிதை – நீ

என் இமைகள்
அசையாமல் ரசிக்கும்
அழகிய ஓவியம் – நீ

என் நெஞ்சை
இதமாய் வருடும்
அழகிய தென்றல் – நீ

என் இறுதி வரை
என்னுடன் தொடரும்
அழகிய உயிர் – நீ

என்றும்
என்னுள்ளே நிலைத்திருக்கும்
என் இனிய தோழி – நீ

Monday, June 7, 2010

காத்திருப்பேன்

குளக்கரையில் அமர்ந்திருந்த நான்
வராத காதலிக்கு
எண்ணற்ற வளையல்களை பரிசளித்து கொண்டு இருந்தேன்!
மானசீகமாய்!

பெண்ணின் எல்லை

ஒரு பெண் காதலிப்பாள் அல்லது வெறுப்பாள்
நடுத்தரத்தை உணர மாட்டாள்

கவிஞனின் வரலாறு

ஒரே ஒரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஒளியூட்டப்பட்டுக்
கவிஞனானேன்!

Thursday, June 3, 2010

என் நட்பு...

வளர்வது தெரியாது
வளர்ந்ததும் தெரியாது

நகம் போன்றது

நட்பு....


எதிர் அணியில்
இருந்தாலும்

எதிரி அல்ல


நண்பன்....



திருப்பிக்  கொடுத்து

தீர்த்துக் கொள்ளும்
கடனல்ல

நட்பு...

உயிர் வலி

மறக்க முயற்சிக்கின்றேன்
முடியவில்லை
உயிர் வலிக்கின்றது
தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்படும்
அகதி போல......

நினைவு


எந்த பெண்ணைப் பார்த்தாலும்
என்னவளின் ஞாபகம் எனக்கு
ஒரு கணமாவது - என்னை
அவள் நினைத்திருப்பாளா?!

காதலித்துப்பார்.....

காதலித்துப்பார்.....
ஆயிரமாயிரம் வார்த்தைகள் தோன்றும்
அவற்றின் பொருளை நீயே அறியாய்
காதலித்துப்பார்.....
ஏதேதோ எழுத நினைப்பாய் - அவை
அனைத்தையுமே மறப்பாய்.....
ஏதேதோ எழுதி விட்டு
அவற்றை கவிதை என்பாய்....
காதலித்துப்பார்.....
யாவற்றையும் ஏன் உன்னையே - நீ மறப்பாய்
அவளையே சதா நினைப்பாய்...
அனைவரையுமே வார்த்தையால் எரிப்பாய்
அவள் எரிந்து விழுந்தாலும் - உன்னில்
அதையும் - நீ ரசிப்பாய்..
காதலித்துப்பார்.....

உள்ளுருகும் உணர்வலைகள்

முண்ணூறு நாட்கள் - என்னை
முள்ளென்றும் கல்லென்றும்..
பாராமல் சுமந்தவளே - அன்னை
பிறவி என்று ஒன்றிருந்தால்
சேவைகள் பல நான் செய்ய..
சேயாக வந்துவிடும் - முல்லை
பாலூட்டி சீராட்டி...
தாலாட்டி துயில் செய்ய
வரம் ஒன்று தந்துவிடும் - உன்னை
மனதாற நான் அணைத்து...
முத்தமிட்டு சொக்கிப்போகும்
மழலை மொழி கேட்டு
உள்ளுருகும் உணர்வலைகள்
தந்தருளுமம்மமா......

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில

மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்

சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு

மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்

மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி

அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை




கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்

கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்

பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்

பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்

விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்

வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்

பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்

பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்




விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி

விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்

சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு

தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்

சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு

சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்

கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்

கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்




உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது

உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்

உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது

உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்

உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது

உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்

உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்

உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்




செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி

தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது

தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?

எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி

எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்

இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்

இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்




பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்

பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்

சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்

சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்

எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்

இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்

மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்

வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்




கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்

காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்

துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி

தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்

பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக

பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்

கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்

கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்




கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்

குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்

கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி

குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்

மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை

முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி

ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்

உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி




- வைரமுத்து (தொகுப்பு - தமிழுக்கு நிறம் உண்டு)

Thursday, May 27, 2010

வெற்றி

நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்  
தோல்வி தான் அடைந்திருப்பாய்...


நீ
தோற்று போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றி தான் பெற்றிருப்பாய்...

உணர்ந்துகொள்
நீ
தோல்வி அடைந்தது வாழ்கையில் அல்ல
புரிதலில்......

Inspiring Thoughts

Wednesday, May 26, 2010

தாலாட்டு

கவிதை எழுத நினைகிறேன் ....
காகிதம் தான் கிடைக்க வில்லை.......
சோகம் சொல்ல நினைகிறேன் ........
தோள்சாய யாருமில்லை ......

ரயிலின் காலி சீட்டை-நான் ......
தாயின் மடியாக நினைத்து தலை சாய்க்க ....
கட கட என தாலாட்டு பாடியதே .....

நான் சிந்திய கண்ணீரை .......
காற்றாய் மறைத்து தாலாட்டியதே......
என்னை மறந்து நான் தூங்க .......
என் சோகம் மறைந்ததுவே.......

கண்முழித்து பார்கையில்லே .......
என் எல்லை வந்ததுவே ......
என் சுமையை இறக்கி வைத்து .....
தாயை பிரிந்து நான் இறங்க ........
என் பாரம் குறைந்ததுவே ........

என் வழியே நான் செல்ல .....
ரயில்லதுவும் மறைந்ததுவே........
என் போல் எத்தனை சோகங்களோ ......
அவள் -மடியில் தலை சாய்த்து கொட்டியதோ ....
இனி கொட்டத்தான் போகிறதோ ....

கட கட என தாலாட்டு பாடியே .....
ஊர் ஊறாய் சுற்றுகிறாள் ....
ஆறுதல் சொல்லிடவே .......
.ரயில்; அன்னை அவள்தானே...

கண்ணீரே

நீ -எங்கிருந்து தோன்றுகிறாய் ........
மனம் சொல்லும் சொல்லாலா ......
மூளை இடும் கட்டளையாலா ......
விழிகளின் கண் அசைபினாலா .....

ஓரு சொட்டாக வந்தாலும் ....
துளி துளியாய் வந்தாலும் .....
அருவியாக வந்தாலும் ....
நினைத்தவுடன் வருவது எப்படியோ .....

திறமையாலும் உருவங்களாலும் ....
பணத்தாலும் செயலாலும் ....
சாதிக்க முடியாததை ....
இமைக்குள் இருந்து கிளம்பும் -நீ ....
நினைத்ததை சாதிப்பது எப்படியோ..
 

தென்றலே தென்றலே

தென்றலே தென்றலே
மன பாரத்துடன் அமர்ந்திருந்த ...
என்னை -நீ அன்புடன் தழுவியதும் .......
மெய் மறந்து போனேனே  ......
நீ -மெல்ல மெல்ல அருகே வந்து ......
விட்டு விட்டு தழுவி சென்றதால் .......
என் -மன பாரம் நீங்கியதே ........

அருகிருந்த செடிகள் எல்லாம் .......
சந்தோஷத்தில் ஆடியதே ......
எப்போதும் நீ என்னருகே இருந்து விட்டால் .....
எத்தனை கஷ்டம் வந்தாலும் .......
உன் போல் காற்றாய் மறைத்து திரிவேனே .....

அழைக்காது வந்து அன்பாய் அரவணைத்து ......
ஆறுதல் தரும் தென்றலே தென்றலே.....
நீயே - எல்லோருக்கும், உண்மைதுணை - எப்போதும்

மாறியது யாரோ ?

மகனே குழந்தை பருவத்தில் -நீ ............
மார்பில் எட்டி உதைத்த போது ..................
அன்று - சந்தோசத்தில் சிரித்தோம் .......

வாலிப பருவத்தில் -நீ ..........
இதயத்தில் உதைப்பதால் .........
இன்று -வேதனையில் அழுகின்றோம் ...............

மாற்றங்கள் வயதில் வரலாம் ................
மாற்றங்கள் வாழ்கையில் வரலாம் ....
அன்பிலும் பாசத்திலும் வருவதுண்டோ ?

மாறியது நீயா -இல்லை ..............
நாங்களா என புரியாது தவிக்கின்றோம்....

தராசு

உன் அன்பையும் .....
என் அன்பையும் .............
தராசில் வைத்தால் ...............
அது சரி சமமாய் நிற்கிறதே ...............
தட்டு காலியாய் இருக்கும்போது மட்டும் ......

அன்பை நிர்ணயிக்கும் .......
நியாயங்களின் அளவை பார்த்தல் ................
மேலும் கீழும் மாறுகிறதே ............
நிலையாய் நில்லாது ..........

ஓஓஓஒ அளவிட முடியாததோ ................
நம் இருவரின் அன்பும்

தீ...

பொறாமை எனும் -தீ ...............
பொறுப்பில்லாத சோம்பேறி .............

பொறுப்பு எனும் -தீ ............
உண்மையான உழைப்பாளிகள் ...........

கற்பு எனும் -தீ ...........
கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர் ............

வெறுப்பு எனும் -தீ ...........
நிலையில்லா மனபோராடம் ...........

பண்பு எனும் -தீ .........
பட பட வைரமாய் ஜொலிபதர்க்கு .........

அன்பு எனும் -தீ .........
இறப்பிலும் இணைவது .........

காதல் எனும் -தீ .......
கண்டதும் கண் மூடி தனமாய் மயங்குவது ............

நட்பு எனும் -தீ .........
நன்மை தீமைகளில் பங்கெடுப்பது .............

இல்லறம் எனும் -தீ .............
இன்ப துன்பங்களில் இணைந்திருப்பது ........

சந்தோசம் எனும் -தீ ..........
பெருமை சாதனைகளில் அடைவது ...........

மடமை எனும் -தீ ..........
கண்மூடி இல்லாததை இருளில் தேடுவது ...........

அறிவு எனும் -தீ .........
அண்டசராசரங்களையும் அறிந்து தெளிவது...

மழைக்கு தெரியுமா ?

குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......

ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......

நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....

எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....

அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......

எத்தனையோ பேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......

நட்பை தேடும் நண்பரின் குரல்

குழந்தை பருவத்தில் .....
சிரித்து விளையாட -கிடைத்தது .....
தெருவிலும் உறவிலும் பல நட்புகள் .......

பள்ளியில் பேசி பகிரவும் .......
விளையாட போட்டிபோட -என ......
கிடைத்தது பல நட்புகள் .....


எதிர் காலதிட்டங்களை ......
பகிர்ந்து கொள்ளவும் .....
பருவத்தையும் உணர்ச்சிகளையும் ....
கொட்டி தீர்க்கவும் -கிடைத்தது ....
பல நட்புகள் கல்லூரியில் ......

ஆர்குட்டில் வரும் நட்புகளோ ......
தினமும் வணக்கம் நலமா ?
என்ற விசாரிப்புகளோடு சரி .....
மீறி எண்ணங்களை பகிரலாம் என்றால் .....
மனம் வரவில்லை எனக்கோ ......
ஏன் என்றாலோ ஊர் வேறு ....
பேர் வேறு ஆள்வேறு -மாற்றி ......
மாற்றி இரண்டு மூன்று பெயரில் ......
ஒருவரே நண்பராக உலா வருவதாலும் ...
புது புது நண்பர்களை மாற்றுவதாலும் .....
இது ஒரு மாயை என தோன்றுகிறது - எனக்கு ....

நட்பு என்பது தானாக வருவது .....
தானாக கேட்பது .....
தானாக உதவுவது .....
தானாக அறிவுறுத்தி திருத்துவது .....

பெற்றோர்களிடமும் உடன் பிறந்தவர்களிடமும் ....
பகிர முடியாத விசயங்களை ......
சொல்ல முடியாத இன்ப துன்பங்களை ....
மனம் விட்டு பகிர .....
உண்மையான நட்பு வேண்டும் எனக்கு ......
அந்தந்த பருவத்தில் வந்த நட்புக்கள் ....
அப்போதப்போதா மறைந்து விட்டது .....
இறைவா என் இடுகாடு பயணம் ....
தொடரும் முன்பாவது எனக்கொரு .....
உண்மை நட்பை தரவேண்டும் எனக்கு -நீ ...

என் நட்பு.....

உண்மை நட்பென்பது ......
கோபம் மறந்து வந்தாலும் ....
கோபத்துடன் பிரிந்தாலும் ....
தானாக சென்று சேர்வது ....

இல்லையோ கோபம் மறந்து வந்த நட்பை ...
உதாசீன படுத்துவதும் ....
வேதனையான நட்பு தான் .......

உனக்கு இருக்கும் ரோசம் ....
எனக்கும் உண்டு எப்போதும் ....
உண்மை நட்பானவன் எப்போதும் ....
என்றுரைத்த வார்த்தை ....
இன்று காற்றோடு கரைந்ததோ ....
இனி -எப்போதும் நீயாக வராது ....
உனக்கு தொல்லை தராது ....
என் நட்பு.....

நான் செத்து போனேனடி பெண்ணே!

கால்கடுக்க காத்திருந்து
தவமாய் தவமிருந்து
உன் -புன்னகையை எதிர் கொண்டேன்
ஆறு மாதம் கழித்து !!!!!!!!!!!!!!

எட்டி நின்று நீ சிரிப்பதை
பார்த்து பார்த்து ரசிதேன்
இரண்டு மாதம் கழித்து !!!!!!!!!!!!

நான் பேசவோ நீ பேசவோ -என்று
காத்திருந்தேன் இரண்டு மாதம் ????????????

மெல்ல மெல்ல அடிவைத்து
என் -அருகே வந்தாய்
இன்னும் -இரண்டுமாதம் கழித்து !!!!!!!!!!!

புல்லரித்து போய் மெய்சிலிர்த்து
நின்றேன் சந்தோஷத்தில் -நான் !!!!!!!!

என் -ஒருவருட தவத்திற்கு
பலன் கிடைத்தது என்று
நீயோ -ஓரு கடிதத்தை கொடுத்து
தினம் உன்னுடன் வரும்
உன் -நண்பனுக்கு இது
கொடுத்து விடு அண்ணா என்றாய் ???????????

கடைசிவரை உன்னை பார்க்கும் சந்தோஷத்தில்
ஒருவருடம் எப்போதும் என்னுடன் -ஓரு
நண்பன் இருந்தான் என்பதை
மறந்து போனதாலோ எனக்கு
இந்நிலையோ உனக்கு அண்ணனாக மாற ???????????????

செத்து போனேனடி பெண்ணே
நான் செத்து போனேனடி பெண்ணே

உறவுகள்

அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்

அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்

அம்மா அப்பா பிள்ளைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்

கணவன் மனைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்

நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்...

உண்மை காதல் ..................

1) மெய் வருத்தி உருகினாலும்
பொய் வருத்தி உருகினாலும்
உண்மை அன்புக்கு மட்டுமே
கட்டுண்டு காத்து கிடப்பது
உண்மை காதல் ..................

2) வெற்றி பெற்றவனுக்கு
காதல் ஓரு மைல் கல்
தோல்வி உற்றவனுக்கு காதல்
ஓரு நிணைவு சரித்திரம் !!!!!!!!!!!!!!!

3) மனம் காற்றாடியாய் அலைந்தாலும்
பறவையாய் இறக்கை கட்டி பறந்தாலும்
கல்லறையே முடிவு என்றாலும்
கால் கடுக்க காத்து கிடப்பது
உண்மை காதல் ..................


4) கல்லடி பட்டு சிதறினாலும்
கண்ணாடியின் எல்லா துண்டுகளிலும்
பிம்பங்கள் பிரதிபலிப்பது போல்
இறப்பின் எல்லை வரை
எந்நிலையிலும் மின்னி மறைவது
உண்மை காதல் ..................

5) கண்ணா மூச்சியாய் காலங்கள் கடந்தாலும்
கடல் ஆழம் போல்
எல்லை காண முடியாது
நினைவலைகளாய் மனதில்
அலைபாய்ந்து ஒளிந்து கொள்வது
உண்மை காதல் ..................

பிரிந்த நட்பும் காதலும்

பிரிந்த நட்பும்
பிரிந்த காதலும்
பல நாட்களோ
பல வருடங்களோ கழித்து
நமை கடந்து போகையில்
இதயத்தின் எல்லையில்
ஒளிந்திருக்கும் நினைவுகள்

உணர்வுகளால் உந்தப்பட்டு
இருவரையும் திரும்பி பார்க்க சொல்லும்
அது -நமக்குள் பிரிவு இல்லை
உண்மையான நேசம் என உணர்த்தும்..

என் நட்பு

நீ தேடும் நபர் இல்லை -என்று
ஓரு வரியில் உன் விரல்கள் சொன்னாலும்
அதை உன் மனம் சொல்லவில்லை -என்று
எனக்கு எப்போதும் புரியும்

நிறம் மாறாத பூவை -போல்
நட்பின் குணம் மாறது
நட்பின் சுவாசத்தை உணர
நீண்ட நாள் காத்திருக்க -நான்

நீயோ ஒற்றை வரியில்
பல நாள் கழித்து வந்து
வண்ணம் மாறும் பட்சோந்தி போல்
நீ தேடும் நபர் நானில்லை -என்று
உன் விரல்கள் சொன்னாலும்

மனம் வருந்தியது முதலில்
பிறகு இதுவும் நன்மைக்கோ என
நட்பில் ஏமாந்தவர்கள் வரிசையில்
நானும் இப்போது நன்றி

என் இனிய தமிழ் மொழியே!


என் இனிய மொழியே
என் இதயத்தின் ஒலியே
நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...
உனக்கு
அதிகமான
கவனிப்புத் தேவைபடுகிறது
நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

எல்லோரும் உன்னைக் கடந்து
சென்றுவிடுகிறார்கள்
உன் சிறந்த சொற்களை
நீ
சுவைப்பதில்லை
வேற்று மொழி
மருந்திலேயே
வீக்கம் கொள்கிறாய்
அசைப் போடுவதே
உன்
அன்றாட வேலையாகிவிட்டது
முன் பிறந்தும்
நீ முடமாகிக் கிடக்கிறாய்
பின்னவள் ஹிந்தியோ
பெரியவளாகிப் போனாள்
நீ முடமாகிக் கிடக்கிறாய்
ஊனமுற்றவர்
ஓட்டப் பந்தயத்தில் மட்டும்
முதல் பரிசு
உனக்கு
ஊனம்
உன்னில் இல்லை
உன்னைச் சுமந்தவர்
நெஞ்சில்
கன்னித் தமிழே
கவிதைச் சோலையில்
கதையில்
காணும் நாடகத்தில்
உன்
புன்னகையே
உன் இதழ்களை
அலங்கரிக்கட்டும்
அந்நிய சாயப் பூச்சு
வேண்டாம்
சொந்தப் பூவையேச்
சூடிக்கொள்
வண்ணங்கள் கலக்கலாம்
எண்ணங்கள் கலக்கலாம்
உன் சுவடுகள்
கலைக்கப்படாமல்
காப்பாற்று...

தொடர்வேன் என்றும்

சொல்லிவிட எண்ணி
பல நாள்
அருகில் வருவேன்

உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து
விலகி விடுவேன்

என் மனதில் உள்ளது
தெரிந்தும்
விளையாடும்
பாவையே

நீ ஏற்று கொள்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை....


தொடர்வேன் என்றும்

Monday, May 24, 2010

அம்மா ....

அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..
உயிரை
வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....

அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன்
அன்பின் கதகதப்பும்,
வலிக்காத தண்டனைகளும்..,
இனி
யாராலும் தர முடியாது..அம்மா..!

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா"
என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??

நீ
இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும்
என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...

அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!

தலைவணங்குகிறேன் அம்மா..!

ஒற்றை வார்த்தையே
ஒருகாலத்தில்
உச்சரித்து
சொல்ல தடுமாறி
உளறிய
என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து
வெளியே
தடுக்கி விழுந்து
தாறுமாறாய்
வெடித்து சிதறிய
வார்த்தைகளால்
உன்மனதை
சுக்குநூறாய்
உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட
உதிர்க்காமல்
ஊமையாகவே
இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான
மரண தண்டனைதான்..!

நான்
கோபப்பட்டு
கடுஞ் சொற்களை
தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம்
எடுத்து வீசியும்கூட
என்மீது
மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே..?

உன் துக்கம்
பலவற்றில்
நான்
பங்குகொள்ளவில்லையே
நீ கதறி அழுத
பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லையே
அப்படியிருக்க
நீ மட்டுமெப்படி
என் சிறு துளி
கண்ணீருக்கும்
படபடத்து
ஏன்
ஒப்பாரி வைக்கிறாய்..?

நான்
வெற்றிபெற்ற
வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாய் சொன்னாய்
நான் தோல்வியுற்ற
வேளைகளில்
வேறு யாரைவது
தேடிபிடித்து
அவர்கள்மீதல்லவா
பழிபோடுகிறாய்
ஏன் அம்மா..?

உன்னை
சிரிக்கவைக்க
நான்
எந்தொரு
சிறு முயற்சி கூட
எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி
முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு
வந்துவிடுகிறது..?

ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
உடம்பு ஏறிவிட்டதென்று
வினவியதை
கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
இப்படி இளைத்துவிட்டாயேயென்ற
உன் வாய்மொழி கேட்டு
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல்
தேய்பிறை போல்
தோன்றுவதன்
அர்த்தமென்ன
என் முழுநிலவாய்
நீ இருப்பதாலா...?

நீ
சாப்பிட்டாயா
என்று கேட்குமுன்னே
சீக்கிரம் வந்து
சாப்பிட சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு
பசியென்ற ஒன்றை
இறைவன்
கொடுக்கவில்லையா..?

நான் உண்டுவிட்டால்
உன்பசியும்
மறைந்துவிடுகிறது
உன் மனதும்
நிறைந்துவிடுகிறது
இது எந்தொரு
அறிவியலிலும்
இந்த உண்மை
நிரூபிக்கப்பட வில்லையே..!

உன் பாசம்
என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன
என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே..!

அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி
போய்விட்டதென்ற
இந்த உண்மையை
உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன்
அம்மா..!

என்ன செய்தாய் என்னை..!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி...

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி...

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி....

நீ என்னுடன் தான் இருக்கிறாய்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்.

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன...

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்.

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

வெற்றியின் ரகசியம்!...

சாதிக்க பிறந்தவன்தான்
மனிதன் என்றான்

முயற்சித்து தோற்றுபோனேன்....

தோல்விதான் வெற்றியின்
முதல்படி என்றான்

படியேறி தோற்றேன்...

முயன்றால் முடியாதது
இல்லை என்றான்

முயன்று வெற்றி பெற்றேன்...

என்னால் முடியாததை நீ
எப்படி செய்தாய் உன்
வெற்றி சந்தேகத்திற்குரியது
என்றான்,

புரிந்தது உண்மையில் வெற்றி
பெற்றுவிட்டேன் என்று!.....

நானும் பூமியே!

நீ சூரியன் என்று மாறிவிட்டாய்…

பூமியாய் எப்பொழுதும் உன்னையே

சுற்றிச் சுற்றி வருவதே

எனக்கு போதுமானதாக இருக்கிறது !

உன்னை நெருங்கவும் முடியாமல்

விலகவும் இயலாமல் ஒரு

எண்ணக்கோட்டுக்குள் அந்த

எல்லைக்கோட்டுக்குள்

உனையே சுற்றி வருகிறேன் !

பள்ளிக்கால கனவுகள்...

பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன...

அவள் நினைவாக...

முதன் முதலில் என் மனதை

தொடமால் தொட்டு

சரித்து விட்டு...



உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து

சென்ற அந்தநாள் ...

இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்

தொடர்கின்றன...

நல்ல பெயர்...

நானும் பெயர் எடுத்திருந்தேன்
நல்லவன் என,
உன்னுடன் பழகும் முன்பு....

இப்பொழுதும் பெயர் எடுத்திருக்கிறேன்
கல் நெஞ்சக்காரன் என,
உன்னை விட்டு விலகிய பின்பு....

சரியோ தவறோ
நான் நானாகவே இருக்கிறேன்....