சின்னதோர் உரசலில்
தெறிக்கின்றன
தீப்பொறி வார்த்தைகள்
வார்த்தையின் சூட்டில்
வெடிக்கிறது
வீட்டின் கூரை
விரிசலுக்கான
காரணம் சொல்லி
ஒருவருக்கொருவர்
வார்த்தைகள் வீச
மேலும் மேலும்
விரிசல்கள்
பிறிதொரு நாளில்
ஆளுக்கொரு மலை விளிம்பில்
விழிகள் பிதுங்கி
வார்த்தைகளற்ற
பள்ளத்தாக்கு பார்த்து
No comments:
Post a Comment