என் பாலைவனம் எங்கும் அன்று
பூக்கள் பூத்தது உன்னால்தானடி
சிரிக்கத் தெரியாத எனக்கு புன்னகைக்க
சொல்லித் தந்ததும் நீதானடி...
எழுதவே தெரியாத என்னை இன்று
கவி எழுத வைத்ததும் நீதானடி
பேசத் தெரியாத எனக்கு இன்று..
பாடக் கற்றுக் கொடுத்ததும் நீதானடி
கல்லாக இருந்த என்னை இன்று..
சிலையாக செதுக்கியதும் நீதானடி
கல்லாக இருந்த பொழுது அன்று என்னை
எவறும் வெறுக்கவுமில்லை விரும்பவுமில்லை
ஒரு சிற்பமாக செதுக்கிய நீயே..
என்னை இன்று வெறுத்தாய் ஏனடி
அழத் தெரியாத என்னை இன்று
அழ வைத்தவளே நீதானடி...
No comments:
Post a Comment