Friday, June 25, 2010

தொலைந்துதான் போனேன்

தொலைந்துதான் போனேன்
இத்தனை நாளாய்.
நீயென்று நான் இருந்ததினால்,
உன் நிழல் தாங்கி
நான் நடந்ததினால்,
என் பாதச் சுவடுகளின்றி
தொலைந்தேதான் போனேன்….

இன்றுதான் தெரிந்தது,
நீ நீயென்று,
நான் நானென்று.
உன் பாதை வேறு,
என் பயணம் வேரென்று!!

புரியாமல் பயணித்ததற்கா....
இவ்வளவு பெரிய தண்டனை?
முன்பே சொல்லி இருக்கலாம் நீ,
என் வரவு உனக்குப் பிடித்தம் இல்லையென,
உன்னை விரும்பாமலாவது
இருந்திருப்பேன்,
இப்படி இறந்திருக்க மாட்டேன்.
என் அழுகையாவது
இந்த பூமியை
நனைக்காமல் இருந்திருக்கும்!

பூக்கள் கேட்டதற்காய்
முட்கள் பரிசளிக்கிறாய்,
மணற்கோட்டை கட்டியதற்காய்
பேரலையாய் அடித்துச் செல்கிறாய்,
இன்று கிளிஞ்சல்கள் மட்டுமே மிச்சமாய்,
நான் கரையோரத்தில்,
நீ தொலை தூரத்தில்…..

No comments:

Post a Comment