Friday, June 25, 2010

தனிமை

முன்பெல்லாம் எப்போதாவது கிடைக்கும்
தனிமைக்கு வருத்தப்படுவதுண்டு…
இப்போது தனிமை பழகிவிட்டதால்
எப்போதும் இனிமையாகவே இருக்கிறது…

ஆயிரத்தெட்டு நண்பர்கள்,
கட்டுக்கோப்பான வெட்டிக்கதைகள்,
தேவையில்லாத அரசியல்,
எப்பொழுதும் யாரைப்பற்றியாவது
உருப்படியற்ற விமர்சனங்கள்,
ஏமாந்த பேர்வழிகள்
வசமாக மாட்டுகையில்,
எண்ணையில் போட்ட
பண்டமாய் பொரித்தெடுத்தல்,
தன்னுடைய கருத்தே சிறந்ததென
ஒவ்வொருவரும் வாதிடுதல்,

இப்படி எப்படியெல்லாமோ
கூடிக் கழித்திருந்த
பொழுதுகள் இனிமையாகத்தான் இருந்தன,
என்றாவது ஒரு நாள்
என்னைப்பற்றியும் இப்படி பேசுவார்கள்
என்று அறியாதவரையில்!!

இப்போது தனிமையே
இனிமையாக இருக்கிறது…
எனக்கென்ற பொழுதுகள்,
என்னைசுற்றிய கவலைகள்,
என்னைப்ற்றிய விமர்சனம்,
இப்படி எல்லாமே எனக்காகவே
நானே சிந்தித்திருக்க,
தனிமையும் கொஞ்சம் தேவைப்படுகிறது…
ஆகையினால், என்னை உருவாக்கும்
இந்த தனிமை இனிமையானதே….

No comments:

Post a Comment