விழிகள் இரண்டும் திறந்திருக்க
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறேன்
சிறகின்றி கற்பனை வானில்
நித்தம் நித்தம் பறந்து செல்கிறேன்
மனதில் தோன்றிய சொற்களை
காகிதத்தாளில் கிறுக்கி விடுகிறேனே
ஆறு அறிவு படைத்த மனிதருள்
ஏழாவது அறிவையும் பெற்றேனோ
மற்றவர்கள் சிந்திற்கும் அளவிற்கு
வரிகளைச் செதுக்குகிறேனே
கவி எழுதுவதையே பிறக்கும் முன்
கடவுளிடம் வரமாகப் பெற்றேனோ
எனக்குள் ஏதோ ஒரு ஞானம்
தினம் வந்து வந்து போகிறது
என் குளியலறையில் தண்ணீர்
இருக்கிறதோ இல்லையோ
நிச்சயம் ஒரு தாளும் பேனாவும்
கண்டிப்பாக இருக்கும்...
காதலில் வீழ்ந்த பெண்ணின்
கைத்தொலைபேசி எப்பொழுதும்
அவள் காதிலேயே இருக்கும்..
கவிதைக்குள் வீழ்ந்த எனது
கையில் எப்பொழுதும் ஒரு
பேனா இருக்கும்...
இவையெல்லாம் எனக்கிருக்கும்
நோய் .. எந்தக் கடையிலே விற்கிறது
அதற்கு மருந்து ..எனக்கேன்
இந்தத் தண்டனையை
கொடுத்தாய் இறைவா.....
No comments:
Post a Comment