Thursday, October 28, 2010

நட்பு மட்டுமே நமக்குள்

"காதலின் அர்த்தமே தெரியாது"
அவள் உதடுகள் சொன்னதை
அவள் கண்களே  மறுத்தன

நட்பு மட்டுமே நமக்குள்
என்றவள் தூரசென்று
திரும்பி பார்த்தாள்.

விலகி செல்ல செல்ல
இடைவெளி குறைந்தது

பிறந்த நாட்கள்
அவள் வருகையில்
பண்டிகை ஆனது

கைப்பேசி க‌ட‌வுளான‌து
க‌டிகார‌ம் எதிரியான‌து

நட்பும்-காதலும் போட்டி
நிஜமாகவே சுவாரசியம்தான்
தோற்று போக‌
இருவருக்குமே
எத்தனை ஆசை!

2 comments:

  1. குடும்ப வட்டத்திற்கு வெளியே
    வாழ்வில் முதல் ஆண் நட்பு
    அதை காதலாய் மாற்றிய நண்பர்கள்....

    நட்பு மட்டும் தான் என்று உணர்த்த
    நட்பிற்கு முற்றுபுள்ளி வைத்த நான்
    இழந்துவிட்டேன் என் நண்பனை .......

    ஆனால் இழக்கவில்லை என் நட்பை
    அவன் என்னை தோழி என்று நினைக்கும் வரை ....

    இருபினும் இழக்கின்றேன் என் மரியாதையை
    அவன் நண்பர்களின் கேலி பேச்சால் ...........

    நட்பை பாரட்ட கேட்டகவில்லை
    காதல் என்று கொச்சைபடுத்தாமலிருக்க வேண்டுகிறேன்
    ************************************************

    ReplyDelete