Monday, March 11, 2013

எங்கே போயிற்று, பெண் விடுதலை!!!

எங்கே போயிற்று பெண் விடுதலை?
எங்கே போயிற்று பெண் விடுதலை?
அது...
தொலைந்து போன அந்த பெண்ணிடமே
தேடுங்கள்!

நாகரிக மோகத்தில்
நம்முடைய
கலாசாரத்தை அழித்த
நங்கைகளிடமே தேடுங்கள்!

நெற்றி திலகமிட்டு
கருங்கூந்தல் சீவி
மலர் சூட்டி
அழகு பார்த்த தாயின் எதிரில்,
கருங்கூந்தல் கத்தரித்து
நாகரிக உடையில்
நளினமாய் திரியும்...
நங்கைகளிடம் தேடுங்கள்!!

அதிகாலையில்
புதுப்புனலாடி
நளினமாய் மாக்கோலமிட்டு
வீட்டில் குத்து விளக்கேற்றும்
நிலைமாறி...
அதிகாலையிலிருந்து
இரவு வரை
அலைபேசியும், கையுமாகத்
திரியும்
நங்கைகளிடம் தேடுங்கள்!

வேறு ஆடவர் முகம் பார்க்க
நாணி கோணி
கால்களால் கோலம் வரையும்
நிலைமாறி...
நட்பு எனும் பெயரில்
ஆடவர்களுடன் ஊர் சுற்றும்
நங்கைகளிடம் தேடுங்கள்!

இவர் தானடி
உன் மணாளன்'
என்று கூறிய நிலைமாறி...
கல்விச் சாலை
செல்லும் போது திருமணம்
முடிவதற்குள் விவாகரத்து
என்று திரியும்
நங்கைகளிடம் தேடுங்கள்!

ஐயகோ...
பாரதியே இதை பார்த்தால்
கொதித்தெழுவார்...
உனக்கேனடி விடுதலை;
உனக்கா நான் வாங்கித் தந்தேன் விடுதலை...
என்று பித்தானக மாறி பிதற்றுவான்!

பெண்ணே...
வாங்கித் தந்த விடுதலை
தன்னம்பிக்கையை உயர்த்தி
வீட்டில் குத்து விளக்கு ஏற்றத்தானே
ஒழிய...
வீட்டை கொளுத்தும்
கொள்ளியாக்க அல்ல!

வாங்கிய விடுதலையை
வீணாக்காதே...
மீண்டும்
மூலையில் முடங்காதே!

— டி.பத்மப்ரியா சாந்தகுமார்.(From Varamalar -Dinamalar)

Thursday, December 13, 2012

இயலாமை....


பரந்த மணற்பரப்பில் கால் பதித்த எனக்கு குறுகிய அவள் இதயத்தில் என் காதல் என்னும் ரேகையைபதிக்க முடியவில்லை .......

Tuesday, June 21, 2011

நீ இல்லாதபோது.....

நீ இல்லாதபோதுதான் புரிகிறது
உன் இருப்பின் அவசியம்!.. ரகசியம்!
இன்னும் என்னென்னவோ! ....
மறைக்க மனமில்லை மறைத்தால்
மனம் செய்யும் தற்கொலை!
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய்" என்றுதான்
பலவும் சொல்லித்தீர்த்தேன்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிறாய்" நீ
தினமும் சொல்லும் "அமுதமொழி"
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!..
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....

Thursday, October 28, 2010

நட்பு மட்டுமே நமக்குள்

"காதலின் அர்த்தமே தெரியாது"
அவள் உதடுகள் சொன்னதை
அவள் கண்களே  மறுத்தன

நட்பு மட்டுமே நமக்குள்
என்றவள் தூரசென்று
திரும்பி பார்த்தாள்.

விலகி செல்ல செல்ல
இடைவெளி குறைந்தது

பிறந்த நாட்கள்
அவள் வருகையில்
பண்டிகை ஆனது

கைப்பேசி க‌ட‌வுளான‌து
க‌டிகார‌ம் எதிரியான‌து

நட்பும்-காதலும் போட்டி
நிஜமாகவே சுவாரசியம்தான்
தோற்று போக‌
இருவருக்குமே
எத்தனை ஆசை!

நீ....

உன்னிடம் சண்டையிட ஆசை
ஆனால் நீ விழிகளிலேயே
சமாதானம் பேசுவாய்....

உனக்காக காத்திருக்க ஆசை
ஆனால் எனக்கு முன்னமே நீ
பூத்திருக்கிறாய்

உனக்கு பிடித்ததை பரிசளிக்க ஆசை
என்ன செய்வது?என்னைதானே
உனக்கு மிகவும் பிடிக்கும்

உன்னை மிக நேசிப்பதாய் நினைப்பேன்
ஆனால் நீ என்னையே
முழுவதுமாய் சுவாசிக்கிறாய்!!

Wednesday, October 27, 2010

கல்வெட்டுக்கள்..

உளிகள் இல்லாமல்
வலிகளால்
செதுக்கப்படும்
கல்வெட்டுக்கள்..

இதயத்தில்
அவள் நினைவுகள்....

தெய்வத்தாய்

அம்மா! உன்னை
கடவுளோடு ஒப்பிட்டால் நான்
ஏற்க மாட்டேன்
"கடவுள்"
கல்லில் செய்த
உருவம்!
என் "அம்மா"
பொறுமையில்
செய்த தெய்வம்!..
                                  --ஜெ.ரேவதி